உள்ளாச விடுதியொன்றில் பூச்சாடியில் கஞ்சா செடி வளர்த்து வந்த ஒருவரை அட்டன் பொலிஸார் கைது செய்துள்னர்
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சவுத் வனராஜா பகுதியிலுள்ள உள்ளாச விடுதியை சுற்றிவளைத்து சோதனையிட்ட போதே கஞ்சா செடிகள் ஒருத்தொகை மீட்கப்பட்டுள்ளது
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து உதவி பொலிஸ் பரிசோதகர் எம் பிரதீப் தலைமையில் 16.10.2018 பகல் மேற்கொள்ளப்ட்ட சுற்றி வளைப்பில் மூன்று கஞ்சா செடிகள் சூட்சமமான முறையில் வளர்த்தமை தெரியவந்துள்ளது.
விடுதிக்கும் வரும் உள்ளச பயணிகளுக்கு விற்பனை செய்ய மேற்படி கஞ்சா செடி வளர்க்கப்பட்டிருகலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்ட்டுள்ளதுடன் வழக்கு பதிவு செய்து 17.10.2018 அட்டன்
மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாவும் அட்டன் பொலிஸார்தெரிவித்தனர்.
எஸ். சதீஸ், க.கிஷாந்தன்