நாட்டில் பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களில் பகல் வேளையில் கணத்த மழை பெய்து வருகிறது.நேற்று 22 ம் திகதி மாலை ஹட்டன் பிரதேசத்தில் பெய்து கடும் மழையினால் ஹட்டன் கொழுமபு; பிரதான வீதியில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் வீதி சுமார் ஆறு அங்குலம் வரை நீரில்; மூழ்கிய இதனால் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்தது.
சுமார் ஒரு மணித்தியாலம் வரை பெய்த கடும் மழை காரணமாக நீர் வழிந்தோடும் கால்வாய்கள் பெருக்கெடுத்தன. இதன் காரணமாக ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் டிக்கோயா பிரதான வீதியின் பல இடங்களில் வீதி வெள்ளக்காடாய் காட்சியளித்தன.
கால்வாய்கள் பெருக்கெடுத்ததன் காரணமாக வீதியில் நடந்து செல்லும் பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது எனவே இறந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மலைவாஞ்ஞன்