அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் மல்லியப்பு ஸ்டிரதன் தோட்ட 71வது கிலோ மீற்றர் பகுதியில் 03.03.2018 அன்று காலை 10 மணியளவில் பால் பவுஸர் மற்றும் மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் கடும்காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் சாரதி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டன் – கொழும்பு ஏ-7 பிரதான வீதியில் பொகவந்தலாவ பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பால் பவுஸர் ஒன்றும் வட்டவளையிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டர் சைக்களும் மல்லியப்பு ஸ்டிரதன் தோட்ட பகுதியில் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார்சைக்கிளை செலுத்தி சென்ற சாரதியே கடும்காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும், மோட்டர் சைக்களின் சாரதி மோட்டர் சைக்களின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
க.கிஷாந்தன், எஸ். சதீஸ்