கொழும்பிலிருந்து – பதுளை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு காயமடைந்த நபர் மேலதிக சிசிச்சைகளுக்காக கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் ஹட்டன் மல்லியப்பூ ரயில்வே கடவையருகில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சிகிச்சைகளுக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹட்டன் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.