ஹெரோயின் மற்றும் கஞ்சா போதை பொருள் வைத்திருந்த 5பேரை அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.அட்டன் குடாகம கொட்டகலை பகுதியில் 23.04.2018 இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு சோதணையின் போதே 1210 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருள் மற்றும் 5200 மில்லி கிராம் கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட குடாகம கொட்டகலை பிரதேசங்களை சேர்ந்த சந்தேக நபர்கள் ஐவரையும் 24.04.2018 அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
மு.இராமச்சந்திரன், எஸ்.சதீஸ்