ஹட்டன் டிக்கோயா பிரதான வீதியில் அலுத்கம பகுதியில் பகுதியில் கெப்ரக வாகனம் ஒன்று சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து ஓடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று இரவு (10) ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் டிக்கோயா பிரதான வீதியில் அலுத்கம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் பகுதியிலிருந்து நோர்வூட் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்து கெப் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
குறித்த விபத்தில் சாரதி மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளன.
கே.சுந்தரலிங்கம்.