ஹட்டன் எபோட்சிலி தோட்டத்தில் 14வயது பாடசாலை சிறுவன் தூக்கிட்டநிலையில் சடலமாக மீட்பு.
ஹட்டனில் சம்பவம்.
ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட எபோட்சிலி தோட்டபகுதியில் உள்ளபாடசாலை ஒன்றில் தரம் 09ல் கல்வி பயிலும் 14வயது சிறுவன் தூக்கிட்டநிலையில் சடலமாக மீட்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்த்னர்.
இந்த சம்வபம் 25.01.2018.வியாழகிழமை மாலை வேலையில் இடம் பெற்றதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ஹட்டன் எபோட்சிலி தமிழ் வித்தியாளயத்தில் தரம் 09ல் கல்விபயிலும் மாணவன் பாடசாலையில் திருட்டு சம்பத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ள மாணவனை பாடசாலையின் அதிபர் தண்டித்ததை தொடர்ந்து வீட்டுக்கு சென்ற சிறுவனை குறித்த சிறுவனுடைய நண்பர்களின் பெற்றோர் ஒருவர் தகாதவார்த்தையில் பேசியமைக்கமைய வீட்டில் தனிமையில் இருந்த போதே குறித்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாமென ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேலை தூக்கிட்டநிலையில் சடலமாக மீட்கபட்ட சிறுவன் அனிந்திருந்த ஆடையின் உறையில் இருந்து கடிதம் ஒன்றை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
இவ்வாறு தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கபட்ட சிறுவன் பிரசாந்குமார் என அடையாளம் காணபட்டுள்ளதோடு சிறுவனின் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கபட உள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் குறிப்பிட்டார் .
சம்பவம் தொடர்பில் மேலதிகவிசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொகண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்