ஹட்டன் ஐ.ஓ.சி பெற்றோல் நிரப்பு நிலையத்தில் இன்று பெற்றோல் விநியோகம்.

0
270

ஹட்டன் பகுதில் ஒரு வாரத்திற்கு பின் இன்று ஹட்டன் நனரிலுள்ள இந்திய பெற்றோலி கூட்டுத்தாபத்திற்கு சொந்தமாக எண்ணை நிரப்பு நிலையத்தில் இன்று (04) அதிகாலை இரண்டு மணியளவில் பெற்றோல் நிரப்பிய பவுசர் ஒன்று வந்திறந்கியது.

பெற்றோல் வருகை தந்த நேரத்திலிருந்து ஹட்டன் நகரில் பரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் வாகனங்களை வரிசையிலிருந்து இடையில் திணிப்பதற்கு முற்பட்டதனால் அமைதியற்ற சூழலும் உருவாகின. இதனை தொடர்ந்து ஹட்டன் நகரில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.

பெற்றோல் நிரப்புவதற்கு கடந்த இரண்டு மூன்று நாட்கள் காத்திருப்பவர்களுடன் இன்று கேள்வியுற்ற பலர் எரிபொருள் பெற்றுக்கொள்ள வருகை தந்தமையினால் ஹட்டன் பிரதான வீதி,ஹட்டன் சுற்றவட்ட வீதி,டன்பார்,உள்ளிட்ட பல வீதிகளில் நெரிசல் நிலை உருவாகியுள்ளன.

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here