நுவரெலியா மாவட்டத்தில் இரண்டாவது நாளாகவும் ஆசிரியர்கள், அதிபர்கள், கால்விசார் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் நிகழ்வுகள் இன்றைய தினமும் (15) இடம்பெற்றன.
இதற்கமைய ஹட்டன் கல்வி வலயத்தில் சுமார் 3200 ஆசிரியர்கள் அதிபர்களுக்கும் காரியாலய உத்தியோகஸ்த்தர்கள், உதவியாளர்கள், சிற்றூழியர்கள் என சுமார் 300 பேர் உட்பட 3500 பேருக்கு இன்று முதல் (15) திகதி முதல் எதிர்வரும் 19 ம் திகதி வரை அம்பகமுவ பொகவந்தலாவை, மஸ்கெலியா ஆகிய பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவின் கீழ் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இன்று ஹட்டன் ஸ்ரீபாத சிங்கள மகா வித்தியாலயத்தில், 1100 பேருக்கும்.
கினிகத்தேனை சிங்கள மகா வித்தியாலயத்தில் 705 பேருக்கும் இன்று வழங்கப்படுகின்றன ஏனையவர்களுக்கு எதிர்வரும் தினங்களில் வழங்குவதனால் பாடசாலையில் மற்றும் கல்வித்துறையில் பணிபுரியும் அனைவரும் அரசாங்கம் இலவசமாக பெற்றுக்கொடுக்கின்ற இந்த தடுப்பூசியினை பெற்றுக்கொண்டு எதிர்கால கல்வி நடவடிக்கையினை ஆரம்பிக்க உதவுமாறு ஹட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் கோரிக்கை விடுத்துள்ளதுடன்.
இந்த தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்திற்கு உதவிய சுகாதார துறைச்சார்ந்த அதிகாரிகள் பொது சுகாதார பரிசோதகர்ள் வைத்தியர்கள் ஹட்டன் நபரசபை தலைவர் உட்பட அனைவருக்கும் இதன் போது அவர் நன்றியினையும் தெரிவிதார்.
கே.சுந்தரலிங்கம்