ஹட்டன் கல்வி வலயம் என்பது மலையகத்திலே நுவரெலியா மாவட்டத்திலே மிக முக்கியமான கல்வி வலயம். இந்த வலயத்தில் 113 தமிழ் மொழி மூல பாடசாலைகளும் 37 சிங்கள மொழி மூல பாடசாலைகளும் காணப்படுகின்றன.
எனவே இதனடிப்படையில் அதிக காலமாக தமிழ் மொழி மூல வலய கல்வி பணிப்பாளர்களே இருந்துள்ளனர்.
தற்போது தரத்தினை காரணம் காட்டி பெரும்பான்மை இனத்தினை சார்ந்த ஒருவரை நியமிக்க ஏற்பாடுகள் நடப்பதாக அறியக்கிடைக்கின்றது.
வலய கல்வி பணிப்பாளராக SLEAS முதல் தரத்தில் உள்ளவர்களை நியமிக்கப்போவதாக கூறினாலும் முழு நாட்டிலும் சில வலயங்களில் தேவைக்கருதி, அவசியம் கருதி இரண்டாம் தரத்தில் உள்ளவர்களையும் வலய கல்வி பணிப்பாளர்களாக பணியமர்த்தியுள்ளனர்.
இவ்வாறிருக்கையில் ஹட்டன் கல்வி வலயத்தில் மாத்திரம் இவ்வாறு நடந்துக்கொள்வது முறையானதல்ல.
இலங்கையில் கல்வி தேசியமயமாக்கப்பட்டு 30 வருடங்களின் பின்பே மலையக பெருந்தோட்ட கல்வி தேசியமயமாக்கப்பட்டது.
எனவே 30 வருட பின்னிலையிலிருந்து முன்னேறிவரும் மலையக சமூகத்திற்கான இத்தகைய வாய்ப்பைக்கூட இந்த அரசாங்கம் கடந்த கால ஹட்டன் வலய குறைப்பாடுகளை காரணம் காட்டி தட்டிப்பறித்து விடக்கூடாது.