ஹட்டன் கொழும்பு பிரதான வீதி  கடும் பனி மூட்டம்- வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை….

0
187

மத்திய மலை நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை  தொடர்ந்து மாலை வேளையில் மழையுடன் ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் கண்டி பிரதான வீதிகளில் பல இடங்களில் என்றுமில்லாதவாறு பனிமூட்டம் காணப்படுகின்றது.

இதனால் இந்த வீடுகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் கவனமாக தங்களது வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கலுகல  பிட்டவலை கினிகத்தேனை கடவளை தீயகலை வட்டவளை  பகுதியிலும்  ஹட்டன் கண்டி வீதியில்  கினிகத்தேனை அம்பகமுவ உட்பட நாவலப்பிட்டி வரை உள்ள பலவிடங்களிலும் கடும் பனி மூட்டம் காணப்படுகின்றன.

இதனால்  இதனால் வீதியோரங்களில் பொருத்தப்பட்டிருக்கும் வீதி சமிக்ஞைகள் எதுவும் கண்ணுக்கு தெரியாதவாறு பனியினால் மூடப்பட்டுள்ளன எனவே  இந்த விதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் தங்களது வாகனத்தில்   முகப்பு விளக்கை ஒளிர செய்தவாறு தங்களுக்கு உரிய பக்கத்தில் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிசார் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே நேரம் மாலை வேளையில் கடும் மழை பல பகுதிகளுக்கு பெய்து  வருவதனால் அட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுகின்றன எனவே குறித்த விதிகளை பயன்படுத்துவோர்  மிகவும் அவதானமாக இருக்கவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
இதே நேரம் பொகவந்தலாவை பகுதியில்  மாலை வேளையில் பெய்துவரும் கடும் மழை காரணமாக லிங்ஸ்டன் மற்றும் லெச்சுமி தோட்டப்பகுதிகளில் கட்டிடம் மற்றும் மண் சரிந்து விழுந்து ஒரு வீட்டுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் ஒரு தொடர் குடியிருப்புக்கு ஆபத்தான நிலையில் ஏற்பட்டுள்ளன.

எனவே மழை நேரங்களில் மண்மேடுகளுக்கும் மலைகளுக்கும் அருகாமையில் இருக்கும் நபர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here