ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் நேருக்கு நேர் இரண்டு முச்சக்கர வண்டிகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் பிக் விடுத்திக்கு முன்னால் இரண்டு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் .
இந்த சம்பவம் 12.02.2018. திங்கள் கிழமை மாலை 04.30 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த பயணிகளுக்கு எவ்வித காயங்களும் ஏற்பட வில்லையெனவும் அதிக வேகம் காரணமாகவே இந்த விபத்து இடம் பெற்றதாகவும் ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த விபத்தின் காரணமாக இரண்டு முச்சக்கர வண்டிகளுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு விபத்து தொடர்பாக மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்