நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், ஹட்டன் சமனலகம காலனியில் உள்ள வீடொன்றில் இன்று (19) அதிகாலை 4:30 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் வீட்டில் இருந்த எவருக்கும் உயிர் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் வீட்டில் வசித்து வந்தவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண் சரிவினால் வீட்டின் சுவர்கள் அடித்துச் செல்லப்பட்டு, வீட்டுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம் உள்ள பகுதியாக சமனலகம் காலனியை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் முன்பே அடையாளம் கண்டிருந்தது. அங்கு வசிக்கும் பலருக்கு ஏற்கனவே மாற்று நிலம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.