ஹட்டன் பாதணி கடையில் பயங்கர தீ!

0
3

ஹட்டன் பிரதான நகரில் அமைந்துள்ள பாதணி கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று (18) பிற்பகல் 1:00 மணியளவில் குறித்த தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.

கடை மூடப்பட்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட தீ வேகமாக பரவிய நிலையில், ஹட்டன் – டிக்கோயா மாநகரசபை தீயணைப்புத் பிரிவு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த தீப்பரவல் சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் ஏராளமான பாதணிகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்தில் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பாதணிகள் முற்றிலுமாக எரிந்து சேதமானது எனவும் சேத விபரங்கள் இன்னும் மதிப்பிடப்படவில்லை எனவும் தெரிவிக்கிப்படுகிறது.

மேலும் சிறிது நேரம் குறித்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் பாதணிகள் எரிந்ததால் எழுந்த புகையால் அப்பகுதிவாசிகள் சுவாசிப்பதில் சிரமப்பட்டனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here