ஹட்டன் பெரிய டன்பார் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிசேக பெருவிழா மேளதான இசை முழங்க பக்தர்கள் ஆராகரா கோசமிட வேதாகம முறைபடி இன்று மிக சிறப்பாக இடம்பெற்றது.
இந்த கும்பாபிசேக பெருவிழா யாக பூஜை. இடம்பெற்று அதனை தொடர்ந்து காலை 9.மணிக்குஉச்சிஷ்ட கணபதி ஷோஷட உபசார பூஜை, 06ம் கால யாக பூஜை,மஹா பூர்ணாகுதி,திபாராதனை,நவக்தி அர்ச்சினை,சதுர்வேத பாராயணம், உள்ளிட்ட நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்று மஹா கும்பாபிசேக பெருவிழா நடைபெற்றன.
கும்பாபிசேகத்தினை தொடர்ந்து கோமாதா பூஜை,தசமங்கள தர்சினம் ஆகியன இமம்பெற்றன.
பின் மகேஸ்வர பூஜை இடம்பெற்று கலந்து கொண்டிருந்த அனைத்து அடியார்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன. மஹா கும்பாபிசேகத்தினை நிகழ்வினை முன்னிட்டு கடந்த 06 ம் திகதி காலை 6.30 மணிக்கு தருண கணபதி ஷோடஷ உபசார பூஜை,ஆச்சார்ய சாந்தி அனுஷ்ட்டானம்,சூர்யாக்கினி,விஷேட நவகிரக ஹோமம்,சிப்பாச்சார்ய சம்பாவனை, தூபிஸ்தாபனம், உள்ளிட்ட சமய கிரிகைகள் நடைபெற்று ஹட்டன் மாவடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து மேள தாள இசை முழங்க யானை பவனிவர தீர்த்த மெடுத்தல் இடம்பெற்றன..
அதனை தொடர்ந்து கடந்த ஏழு மற்றும் எட்டாம் திகதிகளில் எண்ணெய் காப்பு நிகழ்வு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
கும்பாபிசேக பிரதிஷடா பிரதமகுரு சிவ ஸ்ரீ ஸ்கந்தராஜா குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில் சிவாச்சாரியார்கள்,குருக்கள் உட்பட பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது நாட்டிய மாணவி பொன்மணியின் நாட்டியஞ்சிலி நிகழ்வும் இடம்பெற்றதுடன் அவருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கவும் பட்டன.
இதற்கான அனுசரனையினை வர்த்தகரும் தொழிலதிபருமான ஜே.கே.குமார் மற்றும் தோட்ட பொது மக்கள் ஆலய பரிபாலனசபை ஆகியோர் வழங்கியிருந்தனர்.
மலைவாஞ்ஞன்