ஹட்டன் பெற்றோல் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்றவர்கள் இடையே முறுகல்.

0
204

ஹட்டன் பெற்றோல் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்றவர்கள் இடையே முறுகல் நிலை ஏற்பட்டன. ஒரு சிலர் தங்களுக்கு நெருக்கியவர்களை சரிசையின் இடையில் புகுத்துவதற்கு முற்பட்டதன் காரணமாகவும்,ஒரு சிலர் வரிசையில் வராது பெற்றோல் பெற்றுக்கொள்ள முற்பட்டதன் காரணமாகவும் இந்த முறுகல் நிலை ஏற்பட்டன.

பிரதேச வாசிகள் இணைந்து நிலைமையினை சமாளித்தனர். ஹட்டன் பகுதில் ஒரு வாரத்திற்கு பின் இன்று ஹட்டன் நனரிலுள்ள இந்திய பெற்றோலி கூட்டுத்தாபத்திற்கு சொந்தமாக எண்ணை நிரப்பு நிலையத்தில் இன்று (04) அதிகாலை இரண்டு மணியளவில் பெற்றோல் நிரப்பிய பவுசர் ஒன்று வந்திறந்கியது.

பெற்றோல் வருகை தந்த நேரத்திலிருந்து ஹட்டன் நகரில் பரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் வாகனங்களை வரிசையிலிருந்து இடையில் திணிப்பதற்கு முற்பட்டதனால் அமைதியற்ற சூழலும் உருவாகின. இதனை தொடர்ந்து ஹட்டன் நகரில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.பெற்றோல் நிரப்புவதற்கு கடந்த இரண்டு மூன்று நாட்கள் காத்திருப்பவர்களுடன் இன்று கேள்வியுற்ற பலர் எரிபொருள் பெற்றுக்கொள்ள வருகை தந்தமையினால் ஹட்டன் பிரதான வீதி,ஹட்டன் சுற்றுவட்ட வீதி, டன்பார், உள்ளிட்ட பல வீதிகளில் நெரிசல் நிலை உருவாகியுள்ளன.

குறித்த பெற்றோல் நிலையத்திற்கு 6600 லீற்றர் வந்ததாகவும் அதில் மோட்டர் சைக்கிலுக்கு 1500 ரூபாவுக்கும் ,ஆட்டோவுக்கு 2500 ஏனைய வாகனங்களுக்கு 7000 ரூபாவுக்கும் பெற்றுக்கொடுக்கப்பட்டதாக எண்ணை நிரப்பு நிலைய உரிமையாளர் தெரிவித்தார்.

குறித்த பெற்றோல் நிலையத்தில் பெற்றோல் பெற்றுக்கொள்வதற்காக வரிசை நீண்டு காணப்பட்டதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டன. இதே வேளை ஒரு ஆட்டோ சாரதிகளும் பஸ் சாரதிகளும் பெற்றோல் மற்றும் டீசல் போன்றனவற்றை பெற்று அதிக விலைக்கு கைமாற்றிவருவதாகவும் இதனை தற்போது பலர் தொழிலாக கொண்டு செயப்படுவதாகவும் இதனால் ஒரு சிலர் தொடர்ந்து எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படுவதாகவும் இதனை ஒரு சிலர் திட்டமிட்டு வரிசைகளை ஒழுங்கு செய்வதாகவும் வரிசையில் நின்ற பலர் தெரிவிக்கின்றனர்.
எனவே இது குறித்து பாதுகாப்பு பிரிவினர் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மலைவாஞ்ஞன், க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here