மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஹட்டன் மண்ணில் முதல் முறையாக மஹா சிவலிங்க ரத பவனி நேற்று 13 காலை 9 மணியளவில் தலவாக்கலை சென் கூம்ஸ் தோட்டத்தில் உள்ள அம்மன் ஆலயத்தில் மிக சிறப்பாக ஆரம்பமானது.
சிவலிங்கப் பெருமானுக்கு பால் நீர் தேன் பஞ்சாமிர்தம் ஆகிய அபிசேகங்கள் இடம் பெற்று அதனை தொடர்ந்து அலங்கார பூஜை நடைபெற்று தேவாரம் திருவாசகம் ஆகியன பாடப்பெற்று,பக்த அடியார்களின் அரகோர கோஷம் முழங்க மேளதாள வாத்தியங்களுடன் தேர் பவனி ஆரம்பமானது.
குறித்த ரத பவனி அங்குள்ள இந்து ஆலயங்களுக்கு சென்று அதனை தொடர்ந்து தலவாக்கலை, நகரிலும் கொட்டகலை, நகரை சுற்றியுமள்ள இந்து ஆலயங்களுக்கு சென்று முதல் நிறைவு பெற்றது.
இன்றைய தினம் வட்டவளை லொனெக் ஆகிய பிரதேசங்களுக்கு சென்று 17 திகதி ஹட்டனிலும், அதனை நோர்வூட் ,பொகவந்தலா,மஸ்கெலியா உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று சுமார் 128 ஆலயங்களுக்கு சென்று எதிர்வரும் 22 திகதி மஸ்கெலியா நல்லத்தண்ணீர் சிவனொளிபாதமலை அடிவாரத்தில் லக்ஸபான பிரதேசத்தில் கண்காட்சி கூடத்துடன் பிரதிஷ்டை செய்யவுள்ளது.
குறித்த நிகழ்வில் திரி மூர்த்தி சிவலிங்க தரிசனம்,பட விளக்க கண்காட்சி,மனக்குறை தீர்க்கும் மகா யாக குண்டம்.ஆகியன இடம்பெறவுள்ளன.
இதற்கான சகல ஏற்பாடுகளையும் ஹட்டன் பிரம்ம குமாரிகள் ராஜ யோக நிலையம் செய்துள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆரம்ப நிகழ்வின் பூஜை வழிபாடுகளை சிவ ஸ்ரீ வேலுசுரேஸ்வர சர்மா,மற்றும் சென்கூம்ஸ் மேல் பிரிவு ஆலயத்தின் ஆலய பிரதமகுரு ஆகியோர் நடத்தி வைத்தனர்.
மானிடன் மறந்த இறைவன் மண்ணுக்கு வந்துள்ளார் மறக்காமல் வந்து தரிசனம் காண்டு இறையருளை பெருவதற்கு அனைவரையும் அழைக்கிறது பிரம்ம குமாரிகள் ராஜ யோக நிலையம்.
மலைவாஞ்ஞன்