ஹட்டன், ரொத்தஸ் கொலனியில் வாழும் மக்களுக்கு குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கான ஆரம்பக்கட்ட செயற்பாடுகள் முன்னெடுப்பு

0
137

ஹட்டன், ரொத்தஸ் கொலனியில் வாழும் மக்களுக்கு குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கான ஆரம்பக்கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமையவும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரனின் வழிகாட்டலின் கீழ் குறித்த பகுதிக்கு குழுவொன்று அண்மையில் நேரில் பயணம் மேற்கொண்டது.

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இணைப்பு செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ் தலைமையிலான இந்த குழுவில் நுவரெலியா பிராந்தியத்தின் சமூக நீர்வழங்கல் திணைக்களத்தின் அதிகாரி உட்பட பலர் இடம்பெற்றிருந்தனர்.

குடிநீர் திட்டத்தை முன்னெடுப்பதற்கான உரிய இடம் அடையாளம் காணப்பட்டது, இடத்துக்குரிய ஒதுக்கீட்டு அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும். தோட்ட மக்களுடனும் அமைச்சின் பிரதிநிதிகள் கலந்துரையாடி, கருத்துகளை கேட்டறிந்துகொண்டனர்.

ரொத்தஸ் கொலனியில் வாழும் சுமார் 600 குடும்பங்கள், தமக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here