ஹட்டன் தும்புறுகிரிய வீதியில் எழுந்தருளியுள்ள திருவருள் வளர் – ராம சஞ்சீவி ஆஞ்சநேய ஜெயந்தி விழவும் பால்குட பவனியும் மிக சிறப்பாக நடைபெற்றன.
காலை 6.00 மணிக்கு விநாயகர் வழிபாடு, தேவானுக்ஞை, கணபதி ஹோமம், வாஸத்து சாந்தி, கும்பஸ்தாபனம், சங்குஸ்தாபனம், காங்கா தீர்த்தம் எடுத்தல், புண்ணியவாஜனம், யாக பூஜை, சங்கு பூஜை, திரவிய அபிசேகம், தீபாராதனையுடன், நவத்தர சகஸ்ர 1009 சங்காபிசேகத்தினை தொடர்ந்து வசந்த மண்டபபூஜை இடம்பெற்று, இன்று (02) காலை 7.30 மணியளவில் ஹட்டன் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து பால் குடம் எடுத்து வரப்பட்டு பாலாபிசேகம் இடம் பெற்றன.
பால்குட பவனி மற்றும் சமய வழிபாடுகள் சுகாதார வழிகாட்டல்களுக்கமைய நடைபெற்றன. பால்குட பவனியில் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் பக்தர்கள் மிகவும் பக்திமயத்துடன் பால்குட பவனயில் கலந்து கொண்டனர்.
சமய வழிபாடுகளை சிவாச்சாரியமணி,கிரியாஞானசாகரம், பிரம்மஸ்ரீ பூர்ண சந்திரநந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த ஜெயந்தி விழாவில் சிவாச்சாரியார்கள் உட்பட மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.
கே.சுந்தரலிங்கம்