ஹட்டன் ஸ்ரீ சத்தியசாய்பாபா நிலையத்தினால் கொரோனா தொற்றாளர்களுக்கு சிசிச்சை அளிக்கும் ஒரு தொகை மருத்துவ உபகரணங்கள் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டுள்ளன. இதன் போது மல்டிபெரா மொனிடர், பல்ஸ் ஒக்சி மீற்றரும் ஆகிய உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு இன்று (11) ம் திகதி ஹட்டன் சாய்நிலையத்தின் தலைவர் பி.தங்கநாயகம் தலைமையில் நடைபெற்றன.
பிரதேசத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள் நவீன சிகிச்சை உபகரணங்கள் மற்றும் போதியளவு வசதிகள் இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனை கவனத்தில் கொண்டே அவசர தேவையாக காணப்படும் குறித்த உபகரணங்கள் வைத்தியசாலைக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து வைத்தியசாலையின் வைத்தியர் ஜே.அருள்குமரன் கருத்து தெரிவிக்கையில்……
தற்போது இவ்வைத்தியசாலையில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளர்கள் அதிகரித்துக்கொண்டு வருகின்றனர். அதற்கு காரணம் கடந்த காலங்களில் நாங்கள் கொரோனா நோயாளர்களில் மேலதிகமானவர்களை சிகிச்சைக்காக மாற்று நிலையங்களுக்கு அனுப்பி வைத்தோம். தற்போது இங்குள்ள வசதிகளை அதிகரித்துக்கொண்டும் நாங்கள் சிகிச்சை பெரும் நோயாளர்களையும் அதிகரித்துள்ளோம். ஆகவே எமக்கு போதியளவு வசதிகள் இல்லாவிட்டாலும் கூட உள்ளவற்றை கொண்டு உயர்ந் பட்ச சேவையினை பெற்றுக்கொடுத்து வருகிறோம்.
இந்நிலையில் கொரோனா நோயாளர்களுக்கு மல்டிபெரா மொனிடர், பல்ஸ் ஒக்சி மீற்றரும் மிக முக்கியதானதாக காணப்படுகின்றன ஆகவே இந்த தருணத்தில் இதனை உணர்ந்து பெற்றுக்கொடுத்த ஹட்டன் சாய்பாபா நிலையத்திற்கு வைத்தியசாலை சார்பாகவும் மக்கள் சார்பாகவும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
சுகாதார பொறிமுறைகளுக்கு அமைய நடைபெற்ற குறித்த இந்நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஹட்டன் சாய்பாபா இல்லத்தில் நிர்வாக குழுவினர் உட்பட கலந்து கொண்டனர்.
கே.சுந்தரலிங்கம்