ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் எழுந்தருளியுள்ள சித்திவிநாயகர் ஆலயத்திற்கு கிடைத்த நிதியினை நிரந்தர வைப்பிலிட்டு அதில் கிடைக்கின்ற வட்டி பணத்தின் மூலம் கல்லூரியில் கல்வி பயிலும் வறுமை குடும்பத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு தமது உயர்தர கல்வியினை பயில புலமை பரிசில் நிதி வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக கல்லூரியின் அதிபர் ஆர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
குறித்த புலமை பரிசில் வழங்கும் அங்குராப்பண நிகழ்வு கல்லூரியின் அதிபர் ஆர் ஸ்ரீதர் தலைமையில் விஜயதசமி அன்று இடம்பெற்றது.இதில் ஆரம்ப புலமைபரிசில் நிதியினை செல்வி சுந்தரராஜ் சரண்யா என்ற மாணவிக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இது குறித்து பாடசாலையின் அதிபர் ஆர்.ஸ்ரீதர் கருத்து தெரிவிக்கையில் ஹைட்டன் ஹைலன் கல்லூரியில் எழுந்தருளியுள்ள எம் பெருமான் எல்லா செல்வங்களையும் பெற்றுக்கொடுத்து மாணவர்களின் கல்வியில் சிறந்த பெறுபேறுகளையும்,சித்திகளை அளித்து வருகிறார் இந் நிலைய 2020 ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரணதர பெறுபேறுகளில் ஹட்டன் ஹைலன் கல்லூரி தமிழ் மொழி மூல பாசடாலைகளில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.இந்நிலையில் தனிப்பட்ட முறையில் பாடசாலையின் மாணவர்களுக்கு ஏதும் நலன் செய்யமுடியுமா என்று சிந்தித்த போது நாங்கள் இந்த சித்தி விநாயகர் ஆலயத்தில் நிடைக்கப்பெற்ற நிதியினை தனிப்பட்ட வங்கியில் நிலையான வைப்பில் வைத்து அதிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகையினைக் கொண்டு மாணவருக்கு புலமைப்பரிசிலொன்றை பெற்றுத்தரலாம் என்ற எண்ணம் நீண்ட காலமாக இருந்தது. அந்த வகையில் ஆலயத்தின் பரிபாலன சபையினரும் இதற்கு இணக்கம் தெரிவித்திருந்தனர்.
பாடசாலை நிர்வாக மட்டத்தில் , ஆலய பரிபாலன சபை மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமத்துக்கமைய க.பொத சாதாரண தரத்தில் சிறந்த சித்திகளை பெற்று பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள வறிய குடும்பத்தினை சேர்ந்த ஒரு மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அந்த வகையில் 2020 க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் எங்களுடைய ஆசிரியர்களின் முயற்சியினாலும் சிறந்த பெறுபேற்றைப் பெற்றிருக்கின்ற ஐந்து வகுப்புக்களில் ஆசிரியர்களினால் சிபாரிசு செய்யப்பட்ட சிறந்த பெறுபேற்றைப்பெற்ற பொருளாதார உதவிகள் தேவைப்படுகின்ற 10 மாணவர்களை நேர்முகப்பரீட்சைக்கு அழைத்து அவர்களில் ஒருவருக்கு இந்த புலமைப்பரிசில் தொகையினை வழங்க தீர்மானிக்கப்பட்டது.
அதற்கு முன்பாக மகிழ்ச்சியான செய்தியொன்றை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.அதாவது மத்திய மாகாண பொறியியலாளர் திருமதி காமினி சேனாரத்ன அவர்கள் இந்த தகவலினை அனுப்பிவைத்திருந்தார்.
கடந்த 2020ம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் மத்திய மாகாண அனைத்து அரசாங்கப்பாடசாலைகளில் தரவரிசையில் தமிழ் மொழிமூலத்தில் முதலாவது இடம் நமது ஹைலன்ஸ் கல்லூரிக்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றது.மத்திய மாகாணத்தில் உள்ள சிங்கள மொழிப்பாடசாலைகளுடன் ஒப்பிடும் போது மத்திய மாகாணத்தில் 71 புள்ளிகளோடு 15வது இடத்தினையும் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தினையும் சிங்கள மொழிமூல பாடசாலைகளுடன் ஒப்பிடும் போது இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளோம்.
எதிர்வரும் காலங்களில் ஆசிரியர்களின் உழைப்போடு பெற்றோர்களின் உதவியால் இவ்வன்னையின் கடாட்சத்தினாலும் மத்தி மாகாணத்தில் அனைத்து மொழிமூலத்திலும் முதலாம் இடத்தினைப்பெற திடசங்கற்பத்துடன் உழைக்க வேண்டும். அதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் கிடைக்க பிரார்த்திக்கின்றேன்.
இந்த புலமைப்பரிசில் விடயத்திற்கு வரும் போது நேர்முகப்பரீட்சைக்கு சமூகமளித்த ஒன்பது மாணவர்களிலே அவர்களின் பரீட்சைப் பெறுபேறு , குடும்பப் பிண்ணனி, அவர்களின் வருமானம் போன்ற சகல விடயங்களையும் கவனத்திற்கொண்டு ஒரு மாணவி தெரிவுசெய்யப்பட்டுள்ளார் .
நேர்முகப்பரீட்சையின் போது அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து இம்மாணவி பொருத்தமானவரா என தீர்மாணிக்கப்பட்டதோடு இம்மாணவி பொருத்தமானவரா என ஏனைய 8 மாணவர்களின் சம்மதத்தோடு தீரமானிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் ஆறு ஏ சித்திகளை ஒரு பி, சி சித்தியினையும் இன்னொமொரு பாடத்தில் பெறுபேறு வெளியாகவுள்ள அந்த மாணவியினை பெற்றோர் சகிதம் அழைத்து இந்த புலமைப்பரிசில் தொகையினைப் பெற்றுக்கொடுக்கின்றோம்.
இந்தத்தொகை மிகச்சிறிய தொகையாக இருந்தாலும் ஒரு ஆரம்பமாக இருப்பதற்காக விஜயதசமி நாளான இன்று இவ்விடயத்தினை ஆரம்பித்து வைப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.எதிர்வரும் காலங்களில் க.பொத.சாதாரண தரம் உயர்தரம் புலமைபரிசில் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் இதனை விஸ்தரிக்க உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
கே.சுந்தரலிங்கம் .