ஹப்புதளையில் பாடசாலை மாணவர்களைத் தாக்கிய அதிபருக்கெதிராக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்.

0
212

பண்டாரவளை கல்வி வலையத்திற்கு பொறுப்பான ஹப்புதளையில் உள்ள தரம் ஒன்று முதல் ஐந்து வரை இயங்கும் கீழ் பிரிவில் உள்ள அதிபர் நேற்று 20 ம் திகதி தரம் நான்கில் கல்வி பயிலும் 38 மாணவர்களை கரத்தின் பின் புறம் தாக்குதல் நடத்தி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் இன்று பாடசாலை பகிஷ்கரிப்பு மேற் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிபரை இடமாற்றம் செய்யக்கோரி; இன்று பாடசாலை பகுதியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த ஐனவரி மாதம் முன்னாள் அதிபர் ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய அதிபராக இந்த அதிபர் நியமனம் பெற்றார்.
இவரது காலத்தில் பாடசாலையில் முறுகல் நிலை இருந்த போதிலும் நேற்று காலை பாடசாலையில் கல்வி பயிலும் தரம் நான்கில் உள்ள நாற்பது மாணவர்களில் 38 மாணவர்கள் நேற்று பாடசாலைக்கு சமூகம் தந்தவர்களை, வகுப்பறையில் இருந்த தும்பு தடி உடைந்து உள்ளது என கூறி தாக்கியதை தொடர்ந்து பெற்றோர்கள் நேரில் சென்று விசாரணை செய்தனர்.

இதன்போது தான் தாக்கியதாக ஒப்பு கொண்டார் எனவும் இவ்வாறு தாக்குதல் நடத்திய அதிபர் வேண்டாம் என கோரிக்கை முன்வைத்து இன்று இப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

 

ராமு தனராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here