ஹப்புத்தளை சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்றையதினம் 66 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக ஹப்புத்தளை மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எஸ். சுதர்ஷன் தெரிவித்துள்ளார்.
ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை ஆகிய பகுதிகளில் கடந்த 4ஆம் திகதி பெறப்பட்ட 161 மாதிரிகளில், 66 பேருக்கு கொவிட்19 தொற்று உறுதியானதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை எல்ல சுகாதார வைத்திய அதிகாரப்பிரிவில் அதே தினத்தன்று 141 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 43 பேருக்கு கொவிட்19 தொற்று உறுதியானதாக அவர் மேலும் தெரிவித்தார்.