ஹப்புத்தளை- தம்பேதன்ன தோட்டத்தின் மவுசாகல்ல பிரிவைச் சேர்ந்த 64 குடும்பங்களைச் சேர்ந்த 265 உறுப்பினர்கள் நேற்று மாலை தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதாக, ஹப்புத்தளை பிரதேச செயலக அலுவலகம் தெரிவித்துள்ளது.
மவுசாகல்ல மலைப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெடிப்பின் ஊடாக நீர் குடியிருப்புகளுக்கு செல்வதால் ஹப்புத்தளை பிரதேச செயலகம் ஊடாக மக்களை வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு தம்பேதன்ன இலக்கம் இரண்டு பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.