முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பதுளை நீதவான் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை ஆஜராகியுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒன்று தொடர்பான விசாரணைகளுக்காக நீதிமன்றில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.