உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு, முன்னெடுக்கப்படும்போது, சில திட்டங்களை அறிமுகப்படுத்தியவர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று கூறிய சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, சுவ செரிய அம்புலன்ஸ் சேவையை மேம்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியை எதிர்ப்பதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தனக்குத்தானே தீங்கு விளைவித்துக் கொள்கிறார் என்றார்.
உலகளாவிய சுகாதார முன்னேற்றங்கள் மற்றும் தரநிலைகளுக்கு ஏற்ப சுவ செரிய அம்புலன்ஸ் திட்டத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சுவ செரியவின் நிறமும் சின்னமும் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறிய ஹர்ஷ டி சில்வா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
“புதிய லெட்டர்ஹெட்டில் இலங்கை அவசர அம்புலன்ஸ் சேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் சுவ செரிய என்ற பெயர் கீழே சிறிய எழுத்துக்களில் காணப்படுகிறது.
“சுவ செரிய என்பது மருத்துவமனைக்கு முந்தைய பராமரிப்பு சேவையாகும். இது முதலுதவி வழங்கும் சேவை அல்ல” என்று கலாநிதி டி சில்வா கூறினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயதிஸ்ஸ, அம்புலன்ஸ் திட்டத்தை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சியை எதிர்ப்பதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் டி சில்வா தனக்குத்தானே தீங்கு விளைவித்துக் கொள்கிறார் என்றும், லோகோ, நிறம் மற்றும் அனைத்தும் அப்படியே இருக்கும் என்றும் கூறினார்.