ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் பல இலக்குகளை இஸ்ரேல் தாக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கிளர்ச்சியாளர்கள் தளமாகக் கொண்டுள்ள மூன்று துறைமுகங்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஈரானால் ஆதரிக்கப்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் பயணிக்கும் வணிகக் கப்பல்களைத் தாக்கி வருவதால் இஸ்ரேல் இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.