ஹாங்காங்: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 4 பேர் பலி

0
4

ஹாங்காங் நாட்டின் தாய் பொ நகரில் வாங் பெக் கோர்ட்டு காம்பிளஸ் பகுதியில் 35 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

இந்த அடுக்குமாடி 1 ஆயிரத்து 984 வீடுகள் உள்ளன. இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மதியம் 2.50 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அடுக்குமாடி குடியிருப்பின் மேல்பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனாலும், இந்த தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, தீ விபத்து ஏற்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மேலும் பலர் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்க தீயணைப்புத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here