முன்னாள் அமைச்சர் ரிசாட் பதூர்தீன் அவர்களின் வீட்டு வேலைக்கு சென்று எரிகாயங்களுடன் மிகவும் மர்மமான முறையில் கடந்த 15 திகதி உயிரிழந்து சிறுமிக்கு நீதி கோரி நாடெங்கிலும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும், கவனயீர்ப்பு போராட்டங்களும் அஞ்சலி நிகழ்வுகளும் நடைபெற்று வரும் நிலையில்.
ஜூட்குமார் ஹிசாலினிக்கு நிதி கொரி ஹட்டனில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தலையில் கறுப்பு பட்டி கட்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று (29) காலை 11 மணியளவில் மேற்கொண்டனர்
ஆர்ப்பாட்டகார்கள் ‘பெண்களையும் சிறுவர்களையும் விற்று பிழைக்காதே, ”மனித வியாபாரத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்’ தரகர்களை கைது செய்து அன்று உமாதேவி ரீட்டா சுமதி, ஜீவராணி நாளை யார்?’ என பதாதைகளை காட்சிப்படுத்தியவாறு கோசமிட்டனர்.
கவனயீர்ப்பு போராட்டக்காரர்கள் வேண்டும் வேண்டும் ஹிசாலினிக்கு நீதி வேண்டும், விசாரணைகள் துரிமமாக்க வேண்டும், தரகர்களை கைது செய்ய வேண்டும். போன்ற கோசங்களை எழுப்பி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சுகாதார பொறிமுறைக்கு அமைவாக குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுடன் பொலிஸார் பாதுகாப்பு கடமையிலும் ஈடுப்பட்டிருந்தனர்.
மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் பெண்கள் பிரிவு ஒழுங்கு செய்திருந்த குறித்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சிறுவர்கள் மக்கள் பிரதிநிதிகள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கே.சுந்தரலிங்கம்