ஹிஷாலினி வழக்கில் 5 ஆவது சந்தேகநபரான ரிஷாட் பதியுதீன்.

0
155

தமது வீட்டில் பணியாற்றிவந்த சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தமை தொடர்பான வழக்கில் ஐந்தாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

சிறுமி ஹிஷாலினி உயிரிழந்தமை தொடர்பான வழக்கில் ஏற்கனவே சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மாமனார், மைத்துனர் மற்றும் சிறுமியை பணிக்கமர்த்திய தரகர் ஆகிய நால்வரும் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிறிதொரு வழக்கில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இவ்வழக்கில் ஐந்தாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here