பொக்காவல – ரம்புகேவெல பிரதேசத்தில் நேற்று (30) இரவு மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மின்சார ஹீட்டர் ஒன்றைத் தொட்ட போது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கண்டி, ரம்புகேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொக்காவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
		
