“ஹைகுன்” நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்திய தைவான்

0
149

பாரம்பரிய சீன இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பறக்கக்கூடிய ஒரு புராண இராட்சத மீனின் நினைவாக இது “ஹைகுன்” என்று பெயரிடப்பட்டது
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் நீர்மூழ்கிக் கப்பலை தைவான் வெளியிட்டுள்ளது.

சீனாவின் தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் இதனை அறிமுகப்படுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துறைமுக நகரமான கயோசியுங்கில் இடம்பெற்ற இந்த நீர்மூழ்கிக் கப்பலின் வெளியீட்டு விழாவிற்கு ஜனாதிபதி சாய் இங்-வென் தலைமை தாங்கினார்.

எதிர்வரும் சில ஆண்டுகளில் சீனா இராணுவ படையெடுப்பு நடத்தலாம் என அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தைவான் ஒரு தன்னாட்சி தீவாகும், அதை சீனா ஒரு கிளர்ச்சி மாகாணமாக கருதும் நிலையில் என்றோ ஒரு நாள் அதை மீட்டெடுக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சீனா உடனடி தாக்குதலை நடத்தாது என பல பார்வையாளர்கள் நம்பிக்கை கொண்டிருந்தாலும், பெய்ஜிங் நிர்வாகம் தைவானுடன் அமைதியான முறையில் மீண்டும் ஒன்றிணைவதாக நம்பப்படுகிறது.

எனினும் அதே நேரத்தில், தைவானின் வெளிநாட்டு ஆதரவுக்கு எதிராக சீனா எச்சரித்துள்ளது.

1.54 டொலர் பில்லியன் டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கிக் கப்பல் பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு எதிர்வரும் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் கடற்படைக்கு வழங்கப்படும் என்று தைவான் இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாரம்பரிய சீன இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பறக்கக்கூடிய ஒரு புராண இராட்சத மீனின் நினைவாக இது “ஹைகுன்” என்று பெயரிடப்பட்டது.தற்போதைய நிர்வாகத்தின் கீழ் தைவானின் இராணுவச் செலவு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பில் சீனா இன்னும் அதிகாரப்பூர்வமாக கருத்து வெளியிடவில்லை என்பது குறிப்ப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here