ஹைலன்ஸ் கல்லூரியில் பழைய மாணவர் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட புலமை விருட்சம் போட்டி பரீட்சை.

0
208

ஹைலன்ட்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தரம்-5 மாணவர்களுக்கான ” *புலமை விருட்சம்”* போட்டிப் பரீட்சையானது 19.11.2022 நடாத்தப்பட்டது.கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதர் ,பழைய மாணவர் சங்கத்தின் பொது செயலாளர் G.S பிரஜீவன் தலைமையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட இப் போட்டிப் பரீட்சையானது ஹட்டன் கல்வி வலய கோட்டம்-1 பாடசாலைகளுக்கு இடையில் நடாத்தப்பட்டது.

இதில் 40 பாடசாலைகளைச் சேர்ந்த 200 மாணவர்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் முதல் பத்து இடங்களை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு கேடயங்களும் வழங்கி பாராட்டுவிக்கப்பட்டது.

அத்தோடு மொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பாடசாலைகளுக்கு சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கி பாராட்டுவிக்கப்பட்டது.இந் நிகழ்வில் பிரதம அதிதியாக N.சிவகுமார் (Asst.Director of eaducation -primary,zonal Education office,Hatton),சிறப்பு அதிதிகளாக S.புவனேஸ்வரி(ISA),T.அருணகிரி(ISA),J.பிரபவதி(ISA), M.ஜெயந்தினி(ISA), B.M சுதர்சினி(ISA) ஆகியோர்களும் கலந்து கொண்டதோடு பழைய மாணவர் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here