நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வுக்கும் பொருட்கள் தட்டுபாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து அரசிற்கு எதிராக தலவாக்கலை பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட ஹொலிரூட் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
20/04/2022 புதன்கிழமை குறித்த போராட்டம் ஹொலிரூட் சந்தியில் முன்னெடுக்கப்பட்டது.இதன்போது விலைவாசியை குறைத்து நாட்டு மக்களை நிம்மதியுடன் வாழவைக்க அரசும் அரசாங்கமும் முன்வரவேண்டும் அல்லது நாட்டை வழிநடத்த கூடியவர்களிடம் நாட்டை ஒப்படைக்க கூறி பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பி போராட்டங்களை மேற்கொண்டனர்.
நீலமேகம் பிரசாந்த்