ஹோட்டலில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி இருவர் படுகாயம்

0
243

அம்பலாங்கொடை தெல்துவ ஹோட்டல் ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணத்தை இதுவரை தெரியவரவில்லை.

அம்பலாங்கொடையில் ஒரு மாதத்திற்குள் இடம்பெற்ற மூன்றாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இதுவாகும் எனவும் இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாகவும் , பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here