ஹோமாகம நியந்தகலவில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 46 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹோமாகம மற்றும் கொஸ்கொடை பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், ஹோமாகம நியந்தகலவில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 46 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், கொஸ்கொடை பகுதியில் இன்று புதன்கிழமை (21) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 52 வயதான நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.