இலங்கையில் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாயின் சில்லறை விலை ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு கிலோகிராம் பச்சை மிளகாயின் மொத்த விலை 800 முதல் 900 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக, ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 350 முதல் 500 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது.
1 கிலோ பச்சைமிளகாய் 1000 ரூபாய் – நாட்டு மக்களுக்கு பேரிடி..! | Price Of Green Chillies 1Kg 1000 Rupees
சந்தைக்கு வரும் பச்சை மிளகாயின் அளவு குறைந்துள்ளமையால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.