டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம இலக்கம் ஒன்று தோட்டத்தில் தேயிலை மலையில் இருந்து 12.07.2018 அன்று மாலை 4.00 மணியளவில் சிறுத்தை குட்டியொன்றை பொது மக்கள் மற்றும் தோட்ட அதிகாரிகள் உயிருடன் மீட்டு வன ஜீவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த தேயிலை மலையில் வேலை செய்து கொண்டிருந்த போது தேயிலை மலையில் மூன்று சிறுத்தை குட்டிகள் ஓடியதை தோட்டத்தொழிலாளர்கள் கண்டுள்ளனர். அதனை தொடர்ந்து ஒரு குட்டி மாத்திரம் பொது மக்களால் பிடிக்கப்பட்டு தோட்ட அதிகரிகளிடம் ஒப்படைத்த பின் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதனை தொடர்ந்து நுவரெலியா வன ஜீவராசிகள் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் இந்த சிறுத்தை குட்டி ஒப்படைக்கப்பட்டது.
குறித்த தேயிலை மலையை சுற்றி சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் பாரிய காடுகள் காணப்படுவதாகவும், அங்கிருந்து உணவு தேடுவதற்காக தனது தாய் சிறுத்தையுடன் வந்திருக்கலாம் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சிறுத்தை குட்டிகள் பிறந்து மூன்று மாதங்கள் பூரத்தியடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
அண்மைக்காலமாக மலையகத்தின் பல பகுதிகளில் பல தோட்டங்களில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவது குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.
க.கிஷாந்தன்