நிதி அமைச்சிடம் இருந்து எதிர்பார்க்கும் அளவுக்கு விலைச்சலுகை கிடைக்காவிட்டால் எரிபொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
1லீட்டர் பெற்றோலை 15 ரூபாயாலும் 1லீட்டர் டீசலை 25 ரூபாயாலும் அதிகரிக்க IOC நிறுவனம் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
எரிபொருட்களின் விலையை அதிகரிக்க பெற்றோலிய கூட்டுத்தாபனமும் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அந்த கோரிக்கைகள் தொடர்பில் பரிசீலித்து வருவதாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்