ஜப்பான் நாட்டிற்குச் சொந்தமான இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று காணாமல் போயுள்ளது. ஜப்பானின் ஒகினாவாவின் தெற்கு மாகாணத்தில் உள்ள தீவு அருகே சென்ற போது காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காணாமல் போன இந்த உலங்கு வானூர்தியில் 10 பேர் பயணித்ததாக ஜப்பானின் இராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.இதேவேளை, ஜப்பானுக்கு சொந்தமான தீவுகளுக்கு சீனா உரிமை கோரி வரும் நிலையில், சீனா மற்றும் ஜப்பானுக்கு இடையில் முறுகல் நிலை காணப்படுகின்றது.
இந்தநிலையில், ஜப்பானின் இராணுவ உலங்கு வானூர்தி காணாமல் போன விடயத்தில் சீனாவின் செயல்பாடுகள் இருக்கலாம் என ஜப்பான் அதிகாரிகளால் சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த இராணுவ உலங்கு வானூர்தியை கண்டறியும் முயற்சியில் ஜப்பானின் பாதுகாப்புப் படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
காணாமல் போன உலங்கு வானூர்தி தெற்கு குமாமோட்டோ பிராந்தியத்தில் உள்ள இராணுவப் படைக்குச் சொந்தமானதாகும்.