அவரின் திருமண வீடியோ இதுவரை 5,81,000க்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் 10 பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
நியூயோர்க்கை சேர்ந்த 28 வயதான இம்மானுவேல் லுஸ்ட்ன் அண்மையில் 10 இளம்பெண்களை ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் மணந்துள்ளார்.
அவர் கூறுகையில், உறவு என்பது பல மொழிகள், பல ஆளுமைகள், பல அழகான தோற்றங்களை வைத்து வரும். ஆனால் எல்லாவற்றிலும் இருப்பது அன்பு மற்றும் நேர்மறை எண்ணம் தான் என கூறியுள்ளார்.
சமூக ஊடகத்தில் அவர் தன்னுடைய திருமண வீடியோவை பகிர்ந்து இருந்த நிலையில், அந்த வீடியோ இதுவரை 5,81,000க்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
அதே நேரம் இம்மானுவேல் எந்த இடத்தில் வைத்து பத்து பெண்களை திருமணம் செய்தார் என்ற விபரம் தெரிவில்லை.
ஏனெனில், நியூயார்க்கில் அது அங்கீகரிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.