மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் முதன் முறையாக 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
வவுணத்தீவு பகுதியை சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மட்டக்களப்பில் 43 பேருக்கு டெல்டா வைரஸ் திரிபும், நான்கு பேருக்கு அல்ஃபா திரிபும் உறுதியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.