100 போட்டியில் கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்த ரொனால்டோ!

0
265

சர்வதேச கால்பந்து போட்டி வரலாற்றில், 100 போட்டியில் கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்தார்.

யூரோ கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று போட்டியில் போர்த்துக்கல் அணி லியச்ட்டேன்ஸ்டீன் அணியை எதிர்கொண்டது. போர்த்துக்கலின் கேன்சலோபெர்னாடோ சில்வா தலா ஒரு கோலும், ரொனால்டோ மிரட்டலாக இரண்டு கோல்களும் அடித்தனர்.

லியச்ட்டேன்ஸ்டீன் அணியால் பதில் கோல் அடிக்க முடியாததால், போர்த்துக்கல் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் ரொனால்டோ புதிய வரலாற்று சாதனையைப் படைத்தார்.

அதாவது, ஆண்களுக்கான சர்வதேச கால்பந்து வரலாற்றில் 100 போட்டி கோல்கள் அடித்த முதல் வீரர் ரொனால்டோ ஆவார்.

முன்னதாக, கத்தார் உலகக்கோப்பையில் கோல் அடித்ததன் மூலம் ஐந்து உலகக்கோப்பை போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் ரொனால்டோ படைத்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here