1000 ரூபா சம்பளத்தினை முழுமையாக பெற அரசாங்கமே ஆவனம் செய்ய வேண்டும்.

0
183

அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் 05 திகதி வர்த்தமானி மூலம் பெற்றுக்கொடுத்த ஆயிரம் ரூபா சம்பளத்தினை தோட்டத்தொழிலாளர்களுக்கு முழுமையாக பெற்றுக்கொடுக்க வேண்டும் என தோட்டத்தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தோட்டத்தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளத்தினை பெற்றுத்தர கோரி பல வருட காலமாக போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கூட்டு ஒப்பந்ததத்திலும்’ 1000 ரூபா சம்பளம் கட்டாயம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின.

எனினும் கம்பனிகள் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்க முடியாது என கம்பனிகள் விடாபிடியாக இருந்ததனையடுத்து சம்பள நிர்னைய சபையினூடாக தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டு வர்த்தமானியும் வெளியிடப்பட்டன.

ஆனால் அந்த நாள் தொடக்கம் தோட்டத்தொழிலாளர்களை கம்பனிகள் என்று மில்லாதவாறு நசுக்கி வருவதாகவும் தொழிலாளர்கள் சட்டங்களை மீறி மிகவும் மோசமான முறையில் நடத்தி வருவதாக தொழிலாளர்களும் பொது அமைப்புக்களும் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து தோட்டத்தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில்……

1000 ரூபா சம்பளம் வழங்குவதற்கு முன் நாங்கள் தோட்டங்களில் 16 கிலோ தான் ஒரு நாள் பேருக்கு பறித்து வந்தோம் ஆனால் இன்று அந்த நிலை மாறி 18 கிலோ பறிக்குமாறு கட்டாயப்படுத்துகின்றனர். அவ்வாறு 18 கிலோவுக்கு குறைவாக பறித்தால் அரை நாள் பேருதான் வழங்கப்படுகின்றன. மேலதிக கொழுந்துக்கும் காசு கொடுப்பதில்லை. இந்த பேருக்கான தேயிலை கொழுந்தின் அளவு தோட்டங்களுக்கு தோட்டம் மாறுபடுகின்றன. சில தோட்டங்களில் 20 கிலோ பறிக்க வேண்டும் ஒரு சில தோட்டங்களில் 20 கிலோவுக்கு குறைவாக பறித்தால் ஒரு கிலோவுக்கு 50 ரூபா படிதான் சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படுகின்றன.

இதனால் தோட்டத்தொழிலாளர்கள் வறுமையிலும் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.அது மாத்திரமன்றி தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுத்த தேயிலை தற்போது கொடுப்பதில்லை. நலன்புரி விடங்களும் குறைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிறுவையின் போதும் கொமிஸ் என்று சொல்லி 2 தொடக்கம் 3 கிலோ கழிக்கின்றன. அவ்வாறு பார்க்கும் போது தொழிலாளர் ஒருவர் நாள் ஒன்றுக்கு 26 கிலோ பறிக்க வேண்டி ஏற்படுகின்றன.
இதனால் அரசாங்கம் பெற்றுக்கொடுத்த 1000 ரூபா சம்பளத்தினை முழுமையாக எவருமே பெறுவதில்லை மாறாக பெற்று வந்த சம்பளம் கூட இல்லாது போய் உள்ளன.

அத்தியவசிய பொருட்கள் வானளவு உயர்ந்துள்ள நிiலையில் நாங்கள் எப்படி உயிர் வாழ்வது எங்களது பிள்ளைகளை எப்படி காப்பாற்றுவது.
அத்தோடு தோட்டங்கள் இன்று காடுகளாக மாறியுள்ளன தோட்டங்களுக்கு உரம் போடுவதில்லை.அவ்வாறான நிலையில் நாங்கள் எப்படி 18 கிலோ தேயிலை கொழுந்து பறிப்பது கொழுந்து உள்ள காலங்களில் 18 கிலோ பறித்து கொடுத்தாலும் வரட்சி மற்றும் அதிக மழை காலங்களில் பறிக்க முடியுமா என கேள்வி எழுப்புகின்றனர் எனவே இது குறித்த உரியவர்கள் கவனத்தில் கொண்டு நியாயமான தீர்வினை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் உப செயலாளர் சச்சிமதநந்தன் கருத்து தெரிவிக்கையில்….

தோட்டத்தொழிலாளர்களின் வேதன விடயத்தில் மிகவும் பிரதானமாக காணப்பட்டது. கூட்டு ஒப்பந்தம் கடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்தம் ஒரு அடிமை சாசனம் அதிலிருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெளியேற வேண்டும் என்றெல்லாம் குரல் கொடுத்தார்கள்.இந்த காலக்கட்டத்தில் கௌரவ ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்,நுவரெலியா மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் எம் ரமேஸ்வரன் உட்பட அனைவரும் முயற்சித்தார்கள் நியாயமான சம்பளத்தினை பெற்றுத்தர வேண்டும் என்று செயப்பட்டார்கள்.

அப்போது மலையகத்தில் உள்ள தலைவர்கள் கூட்டு ஒப்பந்த்தத்திலிருந்து வெளியே வாருங்கள் நாங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஆயிரம் ரூபா சம்பளத்தினை பெற்றுக்கொடுப்போம் என தெரிவித்தார்கள். இதனால் 1000 ரூபா பெற்றுக்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டு பாரிய பிரயத்தனத்துக்கு மத்தியில் இலங்கை அரசாங்கத்தின் மூலம் ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

பல தோட்டங்கள் இன்று 18 கிலோ எடுத்தால் தான் ஆயிரம் ரூபா 17 கிலோ எடுத்தால் கூட அரை நாள் சம்பளத்தினை வழங்கிவிட்டு மிகுதிக்கு நிர்வாகம் நினைத்தால் மேலதிக கிலோவாக கணித்து கொடுக்கின்றன இல்லாவிட்டால் இல்லாத நிலையே காணப்படுகின்றன.அது மட்டுமல்ல பல்வேறு கெடுபிடிகளையும் தோட்ட நிர்வாகங்கள் தோட்ட தொழிலாளர்களுக்கு செய்து வருகின்றன. கடந்த காலங்களில் தோட்ட நிர்வாகங்களுக்கும் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆராக்கியமான உறவு இருக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் அமைச்சரும் ஆறுமுகன் தொண்டமானும் சரி சௌமிய மூர்த்தி தொண்டமானும் சரி கூட்டு ஒப்பந்தத்தினை பாதுகாத்து வந்தனர்.

அதனால் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக நிறைய விடங்களை பேசி சுமுகமாக செய்து வந்தனர்.இன்று நிலை அப்படியில்லை இன்று கம்பனிகள் நினைத்ததெல்லாம் செய்வதற்கான வழியினை அவர்கள் அமைத்து விட்டார்கள.; எனவே இதற்கான மாற்று நடவடிக்கை வெகு சீக்கிரத்தில் கம்பனிகளுடன் பேசி கம்பனிகள் இழுத்தடிக்கும் வேலைகளை சரிசெய்வதற்கான ஒரு உகத்தியை ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேற்கொண்டுள்ளதாக அவர் இதன் போது தெரிவித்தார்.

கே.சுந்தரலிங்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here