10150 குடும்பத்திற்கு ஒரு கிராம சேவகர் மிக அநீதியானது _மனித உரிமை ஆணைக்குழுவில் முறைபாடு.

0
211

நாட்டில் 150 தொடக்கும் 350 குடும்பங்களுக்கு ஒரு கிராம சேவகர் இருக்கும் போது நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 10150 குடும்பங்களுக்கு ஒரு கிராம சேவகர் இருப்பது மிகவும் அநீதியானது என மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் இன்று 04 திகதி ஹட்டன் மனித உரிமைகள் ஆணைக்குழவின் கிளை காரியாலயத்தில் முறைபாடு ஒன்றினை ஆணைக்குழுவின் தலைவர் பேராசியரியர் தனராஜ் அவர்களிடம் கையளித்து நடைபெற்ற ஊடக சந்திப்பிபோது போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் நாட்டில் மிக அதிகமான குடும்பங்கள் கொண்ட கிராம சேவகர் பிரிவுகள் உள்ள மாவட்டமாக நுவரெலியா மாவட்டமே உள்ளது..

ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் 1500,2000,மூவாயிரம் என உள்ளன கர்கஸ்வோல்ட் கிராம சேவகர் பிரிவில் மாத்திரம் 10150 குடும்பங்கள் உள்ளன. இது குறித்த நாங்கள் ஆளுநர் உட்பட பல அரசியல் தலைவர்களுக்கு முறைபாடுகளை செய்து வந்த போதிலும் இது வரை தீர்வு கிடைக்கவில்லை.
இதனால் எமது மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் வளப்பகிவர்வுகள் முறையாக சென்றடைவதில்லை. அரச உதவிகள் சரியான முறையில் கிடைப்பதில்லை.எனவே இது ஒரு அடிப்படை உரிமை மீறலாகும்.

எனவே இது குறித்த முறையான விசாரணைகளை மேற்கொண்டு இவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக முறைபாட்டினை செய்துள்ளோம்.
அரசாங்கம் 2020 ஆண்டு கோரிய விண்ணப்பங்களுக்கு தற்போது கிராம சேவகர் ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது இதனால் நுவரெலியா மாவட்டத்தின் பிரச்சினை தீரப்போவதில்லை காரணம் இந்த மூன்று வருடங்களில் எத்தனையோ பேர் ஓய்வூதியம் பெற்றிருக்கலாம் எனவே இதற்கு நியாமான தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here