இந்தியாவின், பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில், 11 பேர் பலியான சம்பவத்துடன் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலியின் லண்டன் பயணமும் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக பாதுகாப்பு காரணமாக அவசரமாக இந்த நிகழ்வை நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.
எனினும் விராட் கோலி லண்டன் செல்ல வேண்டும் என்பதன் காரணமாகவே,அவசர அவசரமாக வெற்றி நிகழ்வை நடத்த, கர்நாடக மாநில கிரிக்கெட் நிர்வாகத்துக்கு, ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நிர்வாகம், அழுத்தம் கொடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் அமைக்கப்பட்ட குழுவின் விசாரணையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிண்ணத்தை ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு எனப்படும், ஆர்.சி.பி அணி கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில், 2025 ஜூன் 4ஆம் திகதியன்று, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வெற்றி விழா நடத்தப்பட்டபோதே நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.