கங்கை அமரனின் மனைவியும், வெங்கட் பிரபுவின் தாயாருமான மணிமேகலை காலமானார்.

0
193

கங்கை அமரனின் மனைவியும், இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் பிரேம்ஜியின் தாயாருமான மணிமேகலை (69) நேற்று இரவு காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்றிரவு 11:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன், நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராவார்.

இவரது மூத்த மகன் வெங்கட் பிரபு, வெற்றிகரமான இயக்குநராகவும், நடிகராகவும் வலம்வருகிறார்.

இளையமகன் பிரேம்ஜி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here