இந்திய கிரிக்கெட் அணி ஜுலை மாதத்தில் இலங்கை வருகிறது!

0
248

இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜுலை மாதத்தில் இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சவுரவ் கங்குலி இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அணிக்கு எதிரான இந்த தொடரில் 3 சர்வதேச ஒருநாள் மற்றும் 5 இருபதுக்கு இருபது போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஜூன் மாதத்தில் இந்திய அணி உலக டெஸ்ட் சம்பியன்ஸிப் போட்டியிலும், ஓகஸ்ட் மாதத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்லவுள்ளது.

அதேநேரம், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கை மற்றும் இங்கிலாந்தில் உள்ள தனிமைப்படுத்தல் நடைமுறைகள் என்பனவற்றை கருத்திற்கொண்டு இலங்கை அணியுடனான தொடருக்கான கால அட்டவணை மற்றும் அணி விபரத்தை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாகவும் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here