நுவரெலியா மாவட்ட மரக்கறி விவசாயிகளுக்கு ஆகஸ்ட் மாதம் கடைசி பகுதிவரை அசேதன பசளையினை தடையின்றி வழங்கப்படும் ஆகையால் பசளை தட்டுப்பாடுகள் தொடர்பில் விவசாயிகள் அச்சம் கொள்ள தேவையில்லை. என நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட உறுதியாக தெரிவித்துள்ளார்.
அசேதன பசளை தட்டுப்பாட்டால் நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறி விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பில் மாவட்ட செயலாளரிடம் ஊடகவியலாளர்கள் நேரடியாக வினவியப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த சந்திப்பானது மாவட்ட செயலாளரின் உத்தியோகப்பூர்வ காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது.
அரசாங்கம் அசேதன பசளைக்கு தடைவிதித்து கூட்டுப்பசளையை எதிர்வரும் காலங்களில் விவசாய நடவடிக்கைகளுக்கு பாவிக்க அறிவித்திருந்தது.
நாட்டில் நஞ்சற்ற உணவு உற்பத்தியை நடைமுறைப்படுத்தவே அரசாங்கம் இத்தகைய நடவடிக்கையை அறிவித்துள்ளது.
இருப்பினும் நுவரெலியா மாவட்ட மரக்கறி விவசாயிகள் தாம் உற்பத்தி செய்யும் மரக்கறிகளுக்கு அசேதன பசளையை பழக்கப்படித்தியுள்ளனர்.
அதை படிப்டபடியாக குறைத்து கூட்டுப்பசளையிட்டு விவசாயத்தை எதிர் வரும் காலத்தில் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இக்காலப்பகுதியில் நுவரெலியா மாவட்ட மரக்கறி உற்பத்திக்கென விவசாயிகளுக்கு அசேதன பசளை அவசியம் என்பதை பல தரப்பினரும் தனக்கு சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆகையால் கமநல சேவை காரியாலயங்கள் ஊடாக விவசாயிகளுக்கு அசேதன பசளை வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வப்போது கமநல சேவை காரியாலயங்களுக்கு வந்து கிடைக்கும் பசளைகளை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்தில் 11 ஆயிரம் ஏக்கர் விவசாயக்காணிகள் இருக்கின்றது.
அதில் 06 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் விவசாயத்தை மேற்கொள்கின்றனர்.
இவ்வாறு விவசாயத்தை மேற்கொள்வோருக்கு 9500 மெற்றிக் தொன் அசேதன பசளை தேவைப்படுகிறது.
இதில் கிழங்கு பயிர் செய்கையாளருக்கு 4500 மெற்றிக் தொன் கிழங்கு உரமும்,மரக்கறி பயிர்ச் செய்கையாளர்களுக்கு 3500 மெற்றிக் தொன் சேதன பசளையும் தற்போது தேவைப்படுகிறது.
ஏற்கனவே கமநல சேவை காரியாலயங்கள் ஊடாக படிப்படியாக அசேதன பசளை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக 05 ஏக்கர் விவசாய காணியில் பயிர்ச்செய்கையாளர்களுக்கு எட்டு மூட்டை பசளை வழங்கப்படுகிறது ,ஏனையோருக்கு அவர்களின் விவசாய காணி அளவுக்கேற்ப்ப பசளை மூட்டைகள் பகிரப்பட்டு வருகிறது.
தற்போது எமக்கு 108 மெற்றிக் தொன் அசேதன பசளை நுவரெலியாவுக்கு கிடைக்கப்பட்டுள்ளது. இதை தற்போது பகிர்ந்தளிக்கப்பட்டும் வருகிறது.
மேலும் கடந்த சில காலங்களை விட இம்மாவட்ட விவசாயிகளுக்கு அசேதன பசளை தட்டுப்பாடுகள் இன்றி கிடைப்பதை உறுதியாக சொல்லமுடியும்.
எனவே எதிர்வரும் ஆகஸ் மாதம் இறுதி காலம் வரை இம்மாவட்ட மக்களுக்கு அசேதன பசளையை வழங்க விவசாய அமைச்சு, விவசாய திணைக்களம், மற்றும் அரசாங்கம் உறுதி கூறியுள்ளதால் விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
டி.சந்ரு.