நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் செல்வி விந்தியா ஹன்சானியின் ஏற்பாட்டில் நுவரெலியா மாநகரசபை எல்லைக்குள் உள்ள 9 ஆவது வட்டாரத்தில் வசிக்கும் வயது முதிர்ந்த 80 பேருக்கு கண் பரிசோதிக்கப்பட்டு இலவச மூக்கு கண்ணாடிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன. இவ்
வைபவத்தில் நுவரெலியா மாநகர முதல்வர் சந்தனலால் கருணாரட்ன மற்றம் பிரதிமுதல்வர் யதர்சனா புத்திரசிகாமணி ஆகியோர் மூக்கு கண்ணாடிகளை வழங்கி வைத்தனர்.
டி.சந்ரு